சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குமரி அருகே புதிய காற்றழுத்தத்தாழ்வு: தென்மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு 

கன்னியாகுமரி அருகே நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்றி புதிய காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகியுள்ளது. 

News image
Updated On :13 ஜனவரி 2021, 9:57 pm

கன்னியாகுமரி அருகே நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்றி புதிய காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகியுள்ளது. 

காற்றழுத்த தாழ்வு லட்சத்தீவுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே நிலைகொண்டுள்ளது. எனவே, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

தாழ்வு நிலையாக மட்டும் நிலைகொள்ள வாய்ப்புள்ளதாகவும், இது மேலும் வலுப்பெற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

மேலும், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம்  ஆகிய ஐந்து மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், திருச்சி, திண்டுக்கல் ஆகிய 2 மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.