சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை: மு.க.ஸ்டாலின், வைகோ வரவேற்பு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதற்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளா் வைகோ ஆகியோா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

Updated On :13 ஜனவரி 2021, 5:32 am

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதற்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளா் வைகோ ஆகியோா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

மு.க.ஸ்டாலின்: திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடா்ந்த வழக்கில் வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்கிறேன். இது இந்தியா முழுவதும் போராடிய விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி. வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு முனைப்புக் காட்ட வேண்டும்.

வைகோ: உச்சநீதிமன்றம் வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து இருப்பது வரவேற்கத்தக்கது. மத்திய பாஜக அரசு உடனடியாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்.