திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடி. கடந்த 3 மாதத்தில் நான்கு முறை அணை முழு கொள்ளளவை எட்டியது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீர்மட்டம் 89.50 அடியிலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அணைக்கு உள்வரத்தாக வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நீர்ப்பிடிப்பு பகுதியில் மிக கனமழை பெய்தது. இரவு 8 மணி அளவில் அணைக்கு சுமார் 8000 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து அமராவதி அணையின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணை பகுதியில் பொதுப்பணித்துறையினர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


