சென்னை: மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும், தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமல்ல, தாமாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது, முதல் கட்டமாக புணேவிலிருந்து தமிழகத்துக்கு கரோனா தடுப்பூசி டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இன்று காலை 10.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடையும் தடுப்பூசி மருந்துகள் 10 நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
இதையும் படிக்கலாமே.. ஜன.19 முதல் 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: முதல்வர் பழனிசாமி
தமிழகத்துக்கு முதல்கட்டமாக 5.56 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசிகள் இன்று காலை வரவுள்ளன. சீரம் நிறுவனத்திடம் இருந்து 5,36,500 தடுப்பூசிகள் வருகின்றன. பாரத் பயோ டெக் நிறுவனத்திடம் இருந்து 20 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை வருகின்றன.
கரோனா தடுப்பூசி மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதலில் போடப்படும். தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமல்ல, தாங்களாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்படும். 30 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை போடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


