துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பெருமாள்மலை அடிவாரம் பகுதியில் செவ்வாய்கிழமை காலை வானவில் தோன்றியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிக்கலாமே.. ஜன.19 முதல் 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: முதல்வர் பழனிசாமி
துறையூர் அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் பெருமாள் மலை அடிவாரம் உள்ளது. இந்த மலையைச் சுற்றியுள்ள கிராமப் புற மற்றும் துறையூர் நகர மக்கள் கிரிவலப் பாதையிலும் மலையேறும் பாதையிலும் சுத்தமான காற்றை சுவாசித்தவாறு நடைப்பயிற்சி செய்து புத்துணர்வு பெறுவார்கள். பொதுவாக வறண்ட வானிலை நிலவும் துறையூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக இங்கு சிறு தூறல் முதல் லேசான மழை பெய்து இந்தப் பகுதியை பகலிலும் குளிர்வித்து வருகிறது. இந்த நிலையில் பெருமாள் மலைப்பகுதியில் காலையில் சூரியன் உதிக்கும் வேளையில் வானவில் தோன்றியது.

துறையூர் பகுதியில் வானவில் தோன்றுவதும், அத்தி கட்டி, ஆலங்கட்டி மழை பெய்வதும் பல வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் அபூர்வ நிகழ்வு என்பதால் காலையில் தோன்றிய வானவில்லை நடைப் பயிற்சிக்கு சென்றவர்களும் குழந்தைகளும் பெருமாள்மலை சுற்றியுள்ள பொதுமக்களும் கண்டு மகிழ்ந்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


