சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான மின்னேற்ற நிலையம் தொடக்க விழா வைகுந்ததில் செவ்வாயக்கிழமை நடைபெற்றது.
சுற்றுச்சூழல் பாதுகாக்கவும், பெட்ரோல், டீசல் பயன்பாட்டினை சேமிக்கவும் தற்போது எரிபொருள்களுக்கு பதிலாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மின்வாகனங்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில் அதற்கான மின்னேற்றம் செய்வதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதனையடுத்து சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மின்னேற்ற நிலையத்தை சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜா, அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.வெங்கடாஜலம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


