உத்தமபாளையம்; தேனி மாவட்டம் சின்னமனூரில் தொடர் மழை காரணமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கரும்பு விற்பனை சரிந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை சூழ்ந்த பகுதியில் தேனி மாவட்டம் அமைந்துள்ளது. முல்லைப் பெரியாறு பாசனம் மூலமாக இப்பகுதியில் நெல், வாழை ,தென்னை என பல்வேறு விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி சின்னமனூர் , உத்தமபாளையம் , சீலையம்பட்டி பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு விவசாயம் செய்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடை செய்யப்படுவது வழக்கம் . இந்நிலையில் கடந்த சில நாட்களாக அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது சின்னமனூர் உட்பட மாவட்டத்தில் பல இடங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.
இதனால் பொங்கல் பண்டிகைக்கு அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கரில் விளைவிக்கப்பட்ட செங்கரும்புகள் விற்பனை ஆகாமல் தேங்கிக் கிடக்கிறது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரே நாள் இருப்பதால் வெளிமாவட்ட வியாபாரிகள் வருகை குறைந்ததால் செங்கரும்பு விற்பனையும் சரிந்துள்ளது.
வங்கிகளில் கடன் வாங்கி விளைவிக்கப்பட்ட செங்கரும்பு விற்பனையாகாமல் தோட்டத்திலேயே காட்சிப்பொருளாக நிற்பதால் விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


