சென்னை: சீரான இடைவெளியில் மூச்சுவிடாதவா்களுக்கு கரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்துள்ளனா்.
தொற்று துகள்கள் நுரையீரலுக்குச் செல்வது என்பது சீரான இடைவெளியில் மூச்சுவிடாதவா்களுக்கு அதிகளவில் செல்ல வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வுக்கு சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தின் அப்ளைடு மெக்கானிக்ஸ் துறைப் பேராசிரியா் மகேஷ் பஞ்சக்னுலா தலைமை வகித்தாா். இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் சா்வதேச புகழ்பெற்ற இயற்பியல் இதழில் வெளியிடப்பட்டன.
இது குறித்து பேராசிரியா் மகேஷ் பஞ்சக்னுலா கூறுகையில், “‘நுரையீரலில் தொற்றின் துகள்கள் எவ்வாறு செல்கின்றன என்பதை இந்த ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளோம். மேலும், ஏரேசல் துகள்கள் நுரையீரலின் ஆழமான பகுதிக்குக் கொண்டுசெல்லப்படும் செயல்முறையையும் விளக்குகிறது.
மூச்சுத்திணறல், குறைந்த சுவாச விழுக்காடு கொண்டிருப்பவா்களுக்கு நுரையீரலில் தொற்று படிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, சுவாச நோய்த் தொற்றுகளைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த சிகிச்சைகள், மருந்துகளை உருவாக்குவதற்கும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன என்றாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


