தேனி மாவட்டம் கம்பம் யாதவ மடாலய வளாகத்தில் உள்ள வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் கோ பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம் கம்பம் நவநீதகிருஷ்ண யாதவ மடாலய வளாகத்தில் உள்ள வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் பஜனை மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை கோமாதா பூஜை நடைபெற்றது.
பூஜையையொட்டி திருப்பாவையில் உள்ள 28வது பாடலான கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம் என்று துவங்கும் திருப்பாவை பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்தனர். பின்னர் வேணு கோபாலகிருஷ்ணனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
முன்னதாக கோவில் வளாகத்திற்குக் கொண்டு வரப்பட்ட பசு மற்றும் கன்றுக்குட்டிக்கு மஞ்சள் குங்குமம் வைத்து, மாலை சூட்டி, அலங்காரம் செய்து, பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


