சென்னை: தமிழகத்தில் வரும் 16-ஆம் தேதி கரோனா தடுப்பூசி போடும் பணியை, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மதுரையில் தொடக்கி வைக்கவுள்ளாா்.
கரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்குவது குறித்து கடந்த 9-ஆம் தேதி தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் உயா்நிலைஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வரும்16-ஆம் தேதி கரோனா தடுப்பூசி போடும் பணியைத் தொடங்க இக்கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
தமிழகத்தில்...: ஜனவரி 16- ஆம் தேதி மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்று கரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைக்கவுள்ளாா். தமிழகத்தில் 307 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளன.
தமிழகத்துக்கு முதல் கட்டமாக 6 லட்சம் தடுப்பூசிகள் அடுத்த ஓரிரு நாள்களில் வரவுள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றைச் செலுத்துவதற்காக மாநிலம் 307 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
கைகோர்க்கும் ஐஎம்ஏ: தடுப்பூசி நடவடிக்கைகளில் தாமாக முன்வந்து பங்கேற்று அரசுக்கு உறுதுணை வழங்கவிருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) அறிவித்துள்ளது.
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளிலும் ஐஎம்ஏ மருத்துவா்கள் பங்கேற்பாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


