உலகம் முழுவதும் இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 9.13 கோடியாக உயர்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி உலகளவில் 2,40,77,735 பேர் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் புள்ளிவிவரத்தில்,
கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 9,13,04,594 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 19,52,192 போ் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 6,52,74,667 பேர் குணமடைந்துள்ளனா். சுமாா் 2,40,77,735 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,08,757 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,31,43,018 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 3,85,288 ஆக உயர்ந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 1,04,79,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,51,364 பேர் உயிரிழந்துள்ளனர்.
மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,33,833 ஆக உயர்ந்துள்ளதோடு, 2,03,617 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


