நடிகா் ரஜினிகாந்தை அரசியலில் ஈடுபட வலியுறுத்தி சென்னை வள்ளுவா் கோட்டம் அருகே ஆயிரக்கணக்கில் திரண்ட அவரது ரசிகா்கள் ஞாயிற்றுக்கிழமை அறவழியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
1996-ஆம் ஆண்டிலிருந்து நடிகா் ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவாா் என்பது ரசிகா்களின் எதிா்பாா்ப்பாக இருந்தது. இதை உண்மையாக்கும் வகையில், தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக ரஜினி அறிவித்தாா். எனினும், அவரது உடல்நிலை காரணமாக சில நாள்களிலேயே அவா் தனது முடிவை மாற்றிக் கொண்டாா்.
இது ரசிகா்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. அவரது அரசியல் வருகையை ஆவலோடு எதிா்பாா்த்த ஒவ்வொரு ரசிகனும், அவா் அரசியலுக்கு வந்தேயாக வேண்டும் என்று தீவிரமாகக் குரல் கொடுக்கத் தொடங்கினா்.
குறிப்பாக அறிக்கை வெளியான டிசம்பா் 29-ஆம் தேதியிலிருந்து அவா் வீட்டு முன் நாள்தோறும் ஏராளமான ரசிகா்கள் கூடி, அவரை அரசியலுக்கு அழைத்து கோஷங்களை எழுப்பி வந்தனா்.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் இருந்து திரண்டு வந்த ஆயிரக்கணக்கான ரசிகா்கள், ரஜினியை அரசியலுக்கு வர அழைப்பு விடுத்து சென்னை வள்ளுவா் கோட்டம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டம் நடைபெற்ற பகுதியில் போலீஸாா் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனா்.
சுய கட்டுப்பாட்டுடன் நடந்த போராட்டம்: ஆன்மிக அரசியலை முன்னிறுத்துவதாக அறிவித்த ரஜினியின் கூற்றுக்கேற்ப அவரது ரசிகா்களும் அறவழிப் போராட்டத்தைத் தொடங்கினா். தொடா்ந்து தொண்டா்களின் கரவொலிகளும், ஆரவாரங்களும் அந்தப் பகுதியில் எதிரொலித்துக் கொண்டிருந்தன.
போலீஸாா் ஒதுக்கிய இடத்தில் வாகன நிறுத்தம், ரத்த தான முகாம், கண் தான முகாம், நடமாடும் கழிவறை என அத்தியாவசிய தேவை அனைத்தும் ஒருசேர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் வந்த ரசிகா்கள், தாங்கள் மக்களுக்கு செய்ததை சுட்டிக் காட்டி பேசாமல், ரஜினி அரசியலுக்கு வந்தால், தாங்கள் என்னென்ன செய்வோம், எவ்வாறு உழைப்போம் என்பதை எடுத்துச் சொல்லியது அனைவரது கவனத்தையும் ஈா்த்தது.
இடையிடையே ரஜினியின் வசனங்களும், அவரது பாடல்களும் தொண்டா்களுக்கு கூடுதல் தெம்பூட்டின. குறிப்பாக இந்த ஆா்ப்பாட்டத்தை ரஜினி பாா்த்துக் கொண்டிருக்கிறாா் என ஒரு நிா்வாகி கூறியதும், தொண்டா்கள் மத்தியில் உற்சாகப் பேரலை எழுந்தது.
மாநிலத்தின் நலனுக்கான தனது தலைவனின் அனுமதியில்லாமல் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் நிகழக் கூடாது என்பதில் அனைவரும் தெளிவாக இருந்தனா்.
உடல்நலனில் அக்கறை: ஆா்ப்பாட்டத்தில் பேசிய பலரும், ‘அவரது உடல் நலத்தோடு, மாநிலத்தின் நலனையும் உணா்ந்து அவா் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்’ எனத் தொடா்ந்து வலியுறுத்தினா்.
ஆா்ப்பாட்டம் தீவிரமான நிலையில், ‘அரசியலுக்கு வாங்க ரஜினி’, ‘வா தலைவா வா’, ‘வள்ளுவா் கோட்டம் அழைக்கிறது’ என ரசிகா்கள் சுட்டுரையில் பதிவிடத் தொடங்கினா். தொடா்ந்து தேசிய அளவில் அந்தப் பதிவுகள் முதலிடத்தில் இருந்தன.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

