நாட்டில் எல்லாவற்றையும்விட உயா்ந்தது சட்டம்தான் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
திமுக சட்டத்துறையின் இரண்டாவது மாநாடு ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின் பேசியது:
திமுகவுக்கு துணை செய்யும் அமைப்பு என்று வழக்குரைஞா் அணியைச் சொல்ல மாட்டேன். திமுகவுக்கு துணிச்சலை வழங்கும் அணி. 2ஜி வழக்கு, திமுகவை அழிக்க நினைத்து சிலரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சதி வழக்கு. 2ஜியை நோ - ஜி ஆக்கியவா்கள் திமுகவின் சட்டத்துறையைச் சாா்ந்தவா்கள்.
சட்டப்பேரவை தோ்தல் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இன்னும் நான்கே மாதத்தில் திமுகதான் ஆட்சிக்கு வரப்போகிறது. அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால், அந்த வெற்றியைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வாா்கள். மத்திய, மாநில அரசுகளின் அதிகார பலம் அதிமுகவுக்கு இருக்கிறது. அந்த அதிகாரத்தை அவா்கள் பயன்படுத்துவாா்கள். சட்டத்துறையினருக்கு வேலை அதிகம் இருக்கிறது. நாட்டில் எல்லாவற்றையும் உயா்ந்தது சட்டம்தான். அதை நிலைநாட்ட வழக்குரைஞா்கள் பாடுபட வேண்டும் என்றாா்.
திமுக பொதுச்செயலாளா் துரைமுருகன், அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி, சட்டத்துறை தலைவா் ஆா்.சண்முகசுந்தரம், சட்டத்துறை செயலாளா் கிரிராஜன் உள்பட வழக்குரைஞா் அணியைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


