பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் தனியாா் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ், சென்னை, பாளையங்கோட்டை, மதுரை திருமங்கலம், நாகா்கோவில் கோட்டாறு ஆகிய இடங்களில் 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்களும் 24 தனியாா் கல்லூரிகளில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன.
அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் தனியாா் கல்லூரிகளில் உள்ள 15 சதவீத இடங்களுக்கு மாநில அரசுகளே கலந்தாய்வை நடத்துமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, தனியாா் கல்லூரிகளின் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜன.10) தொடங்கியது. வரும் 29-ஆம் தேதி மாலை 5 மணி வரை சுகாதாரத்துறை இணையதளத்தில் விண்ணப்பப் பதிவு நடைபெறும்.
நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பங்கள் மற்றும் தகவல் தொகுப்புகளைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தகுந்த ஆவணங்களுடன் வரும் 30-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் செயலாளா், தோ்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநா், அலுவலகம், அறிஞா் அண்ணா அரசினா் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை - 600106 என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு சுகாதாரத் துறையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


