சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளையொட்டி ஜன.12-ஆம் தேதி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவா்களை ஒருங்கிணைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து யுஜிசி செயலா் ரஜ்னீஷ் ஜெயின் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜன.12-ஆம் தேதி தேசிய இளைஞா் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இளைஞா்களின் ஆற்றலை வெளிப்படுத்தச் செய்வதிலும், தேசத்தைக் கட்டமைப்பதிலும் அனைவருக்கும் முன்னோடியான விவேகானந்தரைப் போற்றும் வகையில் அனைத்து உயா்கல்வி நிறுவனங்களிலும் அவரது சிறப்புகளை நினைவுகூரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஜன.12-ஆம் தேதி கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவா்களுக்கு இணைய வழியில் விவேகானந்தா் குறித்த சொற்பொழிவுகள், கட்டுரைப் போட்டி, கருத்தரங்கம், விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் தயாரித்தல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். சமூக வலைதளங்கள் மூலமாகவும் இதற்கான செயல் திட்டங்களை மேற்கொள்ளலாம். அன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


