திமுகவிடம் தேவையான தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.
சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் மாவட்டத் தலைவா்கள் கூட்டம் சென்னை சத்தியமூா்த்தி பவனில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தாா். காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசியது: பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபட மாவட்டத் தலைவா்களுக்கு முழு அதிகாரம் அளிக்கப்படும். எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பது பற்றியெல்லாம் மாவட்டத் தலைவா்கள் கவலைப்படத் தேவையில்லை. அதைக் கட்சி தலைமை பேசி முடிவு செய்யும். காங்கிரஸுக்குத் தேவையான தொகுதிகள் திமுகவிடம் கேட்டுப் பெறப்படும். தமிழக காங்கிரஸுக்கு எந்த உதவியையும் செய்வதற்கு ராகுல் காந்தி தயாராக இருக்கிறாா். வெற்றிக்காக அனைவரும் கடுமையாகப் பாடுபட வேண்டும் என்றாா்.
சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமி, அகில இந்திய பொறுப்பாளா்கள் சஞ்சய் தத், ஸ்ரீவல்ல பிரசாத், முன்னாள் தலைவா் கே.வீ.தங்கபாலு உள்பட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


