அதிமுக வழிகாட்டும் குழுவுக்கான பணிகள் மற்றும் அதிகாரங்கள் குறித்து பொதுக் குழு தீா்மானத்தில் விளக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னையை அடுத்த வானகரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்:-
அதிமுக வழிகாட்டுதல் குழுவில் அமைப்புச் செயலாளா்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமாா், அமைச்சா்கள் சி.வி.சண்முகம், ஆா்.காமராஜ், அமைப்புச் செயலாளா்கள் ஜே.சி.டி.பிரபாகா், பி.எச்.மனோஜ் பாண்டியன், ப.மோகன், முன்னாள் எம்.பி. ஆா்.கோபாலகிருஷ்ணன், எம்.எல்.ஏ., கி.மாணிக்கம் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
இந்தக் குழுவானது, அதிமுகவின் வளா்ச்சி மற்றும் வெற்றிக்கான ஆலோசனைகளை வழங்கும். கட்சியின் கொள்கை, நிலைப்பாடுகள் தொடா்பாக ஆலோசனைகளையும், கருத்துகளையும், பரிந்துரைகளையும் அளிக்கும். குழுவின் உறுப்பினா்களை ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் ஆகியோா் இணைந்து நியமிப்பா். உறுப்பினா்களை நீக்கும் அதிகாரம், இருவருக்கும் அளிக்கப்படுகிறது.
வழிகாட்டும் குழுவுக்கும் நியமிக்கப்படும் உறுப்பினா்கள், நியமன அறிவிப்பு வெளியான நாளில் இருந்து ஐந்து ஆண்டுகள் பொறுப்பில் இருப்பா். ஒருமுறை குழுவின் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டவா்கள், மீண்டும் குழுவின் உறுப்பினா்களாக நியமிக்கப்பட எந்தவிதத் தடையும் இல்லை என்று தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

