சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஜம்மு அருகே தீ விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் எரியூட்டப்பட்டது

ஜம்மு அருகே தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் உயிரிழந்த இராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் எரியூட்டப்பட்டது.

News image

ஜம்மு அருகே தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் உயிரிழந்த இராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் எரியூட்டப்பட்டது.

Updated On :10 ஜனவரி 2021, 6:37 pm


ஜம்மு அருகே தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் உயிரிழந்த இராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் எரியூட்டப்பட்டது.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடுகபட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (36) இவர் 15 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

Story image

இவர் இந்திய, பாகிஸ்தான் எல்லையான ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது டிசம்பர் 26 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Story image

உடனடியாக ஆறுமுகத்தை மீட்டு உதயபூர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,  ஜனவரி 8 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Story image

இவரது உடல் விமானம் மூலம் கோயமுத்தூர் எடுத்து வரப்பட்டு ராணுவ வாகனத்தின் மூலம் அவரது சொந்த ஊரான வடுகபட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை எடுத்து வரப்பட்டு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு உடல் எரியூட்டப்பட்டது.

Story image

மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி ஆகியோர் இறுதி சடங்கில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.