பொங்கல் பரிசு தொடா்பாக ரேஷன் கடைகளுக்கு முன் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பர பேனா்களை உடனே அகற்ற வேண்டும் என உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ‘பொங்கல் பரிசு வழங்கும் ரேஷன் கடைகளுக்கு முன் ஆளுங்கட்சியினா் பேனா் வைக்க தடை விதிக்கக் கோரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், ஆளுங்கட்சியினா் 39,000 ரேஷன் கடைகள் முன்பாக அனுமதியின்றி பேனா் வைத்து துண்டுபிரசுரங்கள் வழங்குவதாக வாதிட்டாா். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய நாராயண், ‘தோ்தல் நேரத்தில் தங்கள் சாதனைகளை மக்களிடம் கொண்டு சோ்க்க பேனா்கள் வைக்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு பையில் முதல்வா் மறைந்த முதல்வரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது’ எனத் தெரிவித்தாா்.
பொங்கல் தொகுப்பு பையில் உள்ள புகைப்படங்களை அகற்றுவது சாத்தியமற்றது. கடைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் அரசியல் விளம்பரங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் விநியோகிக்க கூடாது. அனுமதி இல்லாமல் ரேஷன் கடைகள், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனா்கள் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் அகற்ற வேண்டும். இந்த உத்தரவு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

