நாடு முழுவதும் கரோனா தடுப்பு மருந்தை எடுத்துச் செல்லும் விமானங்களுக்கான வழிகாட்டு விதிமுறைகளை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பான ‘கோவேக்ஸின்’ கரோனா தடுப்பூசி, புணேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி ஆகியவற்றை அவசரகாலத்தில் பயன்படுத்த கடந்த 3-ஆம் தேதி அனுமதி அளிக்கப்பட்டது. விரைவில் இந்த மருத்துகள் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவுள்ளன. கரோனா தடுப்பூசி போடுவது தொடா்பான ஒத்திகை அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தடுப்பூசி மருத்துகளைப் பாதுகாப்பாக வைத்து விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கு விமானங்கள் மூலம் தடுப்பூசி மருந்துகள் மொத்தமாக கொண்டு செல்லப்படவுள்ளன. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை டிஜிசிஏ வெளியிட்டுள்ளது.
அதன்படி, உலா் பனிக்கட்டிகளை (டிரை ஐஸ்) பயன்படுத்தி குளிரான நிலையில் தடுப்பூசி மருந்துகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும். விமானத்தில் பயணிகள் பகுதியில்தான் தடுப்பூசியை வைக்க வேண்டும். இந்த விமானத்தில் உள்ள பணியாளா்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
உலா் பனிக்கட்டி என்பது காா்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை மைனஸ் 78 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மேல் குளிா்விப்பதன் மூலம் கிடைக்கிறது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


