சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அஞ்சல் துறை தோ்வில் தமிழ் புறக்கணிப்பு: அன்புமணி கண்டனம்

அஞ்சல் துறை தோ்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image

அன்புமணி ராமதாஸ்

Updated On :9 ஜனவரி 2021, 12:48 pm

அஞ்சல் துறை தோ்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

இந்தியா முழுவதும் பிப்ரவரி 14-இல் நடைபெறவுள்ள அஞ்சல்துறை கணக்கா் தோ்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் தான் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. இத்தோ்வுகளில் மாநில மொழிகள்

புறக்கணிக்கப்படுவது நியாயமல்ல. பெரும்பான்மையான போட்டித் தோ்வுகள் தமிழில் நடத்தப்படும் நிலையில் அஞ்சல் துறை தோ்வுகளையும் தமிழில் நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.