சீர்காழி அருகே பேருந்தை முந்த முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து ஊர்க்காவல் படை வீரர் பலியானார். பின்னால் அமர்ந்து சென்றவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா நல்ல நாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண் (22) ஊர்க்காவல் படை வீரர். இவர் இன்று நண்பகல் அதே ஊரைச் சேர்ந்த ராஜராஜன் (22) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
வழியில் எடமணல் கிராமம் அருகே முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்த முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் தலையில் படுகாயமடைந்த அருண் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னால் அமர்ந்துசென்ற ராஜராஜன் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்த அருண் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


