நாமக்கல்: மத்திய அரசின் தென்னக பண்பாட்டு மையம், தமிழக அரசின் சேலம் மண்டல கலை பண்பாட்டு துறை ஆகியவை சார்பில் நாமக்கல் சுப்புலட்சுமி மஹாலில் சனிக்கிழமை ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சி தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தொடங்கி வைத்தார்.

நாமக்கல் கண்காட்சியில் இடம்பெற்ற ஓவியங்கள்
சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கலை பண்பாட்டு துறையின் சார்பில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் காலை 9.30 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தின் சிறந்த ஓவியச் சிற்பக்கலைஞர்களின் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

இக்கண்காட்சியினை கலை பண்பாட்டுத் துறையின் ஆணையர் வ.கலையரசி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

சென்னை, தஞ்சை கவின் கலைக் கல்லூரிகளின் ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.


இதற்கான ஏற்பாடுகளை சேலம் மண்டல கலை பண்பாட்டு துறை இயக்குநர் ஹேமநாதன் செய்திருந்தார்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


