சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருச்சுழி பகுதி கிராமங்களில் நெற்பயிர்களில் நோய் பாதிப்பு: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருச்சுழி தாலுகாவிற்கு உள்பட்ட விடத்த குளம், வி.புதூர் ஆகிய கிராமங்களில் நெற்பயிர்களில் லட்சுமி நோய், குலைநோய்த் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

News image

அறுவடை நெருங்கும் காலத்தில் லட்சுமி நோய், குலை நோய்த்தாக்குதலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள்.

Updated On :9 ஜனவரி 2021, 11:52 pm

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவிற்கு உள்பட்ட விடத்த குளம், வி.புதூர் ஆகிய கிராமங்களில் அறுவடை நெருங்கியுள்ள இக்காலத்தில் நெற்பயிர்களில் லட்சுமி நோய், குலைநோய்த் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவிற்கு உள்பட்ட விடத்தகுளம்,வி.புதூர் ஆகிய கிராமங்களில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் சுமார் 250 ஏக்கருக்கு மேற்பட்ட பாசன நிலங்களில் விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்தனர். இதற்கு உரியப் பராமரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொண்டிருந்த நிலையில், தைத்திருநாளை முன்னிட்டு அறுவடைக்கும் அவர்கள் தயாராகி வந்தனர்.

ஆனால் தற்போது நன்கு விளைந்திருந்த நெற்பயிர்களின் கதிர்கள், லட்சுமி நோய், குலை நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி, மஞ்சள்நிறத்துடன் காய்ந்து, சருகாகிவிட்டதுடன் முற்றிலும் பயனற்றதாகிவிட்டன. இதனால் அறுவடை செய்ய இயலாமல் விவசாயிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஆகவே அரசும் மாவட்ட நிர்வாகமும் பாதிக்கப்பட்ட விவசாய களங்களை நேரில் ஆய்வு செய்து, கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர, அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.