புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகில் உள்ள மருங்கூரணியில் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் வெள்ளாளவிடுதி ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் சனிகிழமை நடைபெற்றது.
ரத்ததான முகாமிற்கு விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஜெ. பர்வேஸ் தலைமை வகித்தார். இயக்கத்தின் ஒன்றிய தலைவர் பிரசாத், இளைஞரணி தலைவர் அரவிந்த் விஜய் , விஜய் மக்கள் இயக்கம் மன்ற நிர்வாகி அய்யாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சுமார் 30 பேர் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து நலிவுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் ஆயிரம் மதிப்பிலான பொங்கல் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும், பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முகாமில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவர் ஜெயந்தி, புதுநகர் ஆரம்ப சுகாதார வட்டார மருத்துவ அலுவலர் சந்தோஷ், மருத்துவர் ஆனந்த், சுகாதார ஆய்வாளர்கள் முத்துக்குமார், நல்லமுத்து, திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


