மயிலாடுதுறை மாவட்டம் - வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் உள்ள தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களை மற்றும் சுற்றுலாப் பயணிகளை நம்பி தலையில் சுமந்து விற்பனை செய்பவர்கள், சைக்கிளில் இளநீர் தேநீர் விற்பனை செய்பவர்கள், தரைக்கடைகளில் உப்பு மிளகு விற்பவர்கள் தற்காலிக கடைகளில் பூஜை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், தள்ளு வண்டிகளில் கடலை சுண்டல் விற்பனை செய்பவர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர்.
வைத்தீஸ்வரன் கோயில் சாலையோர வியாபாரிகள் பிரதம மந்திரியின் சாலையோர வியாபாரிகள் சுயசார்பு நிதி திட்டம் பற்றி போதிய விழிப்புணர்வு இன்றி விண்ணப்பித்து பயன் பெறாமல் இருந்தனர். பேரூராட்சி அலுவலகம் வந்து வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கப் பலமுறை அறிவிப்பு செய்தாலும் தயக்கம் காட்டி வந்தனர்.
எனவே வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி நிர்வாகம் அதிரடியாக சாலையோர வியாபாரிகள் பிழைப்பு நடத்தும் வைத்தீஸ்வரன் கோயில் கீழவீதி சாலையோரத்திற்கே நேரில் சென்று முகாம் அமைத்து திட்டம் பற்றி விழிப்புணர்வு செய்து வங்கிக் கடன் விண்ணப்பங்கள் பெற்றனர்.
செயல் அலுவலர் கு.குகன் தலைமையில் நடைபெற்ற முகாமில் இளநிலை உதவியாளர் ப. பாமா வரவேற்றார் . சமுதாய அமைப்பாளர் ரா. சிந்தியா விண்ணப்பம் நிரப்ப கற்றுக் கொடுத்தார் . வரிதண்டலர் ஜெ.அமுதா நன்றி கூறினார். பேரூராட்சி பரப்புரையாளர்கள் சரண்யா , அபிராமி ஓட்டுநர் ஜெ.மணிவண்ணன் மற்றும் நா, சுப்ரமணியன், சபரிநாதன், பாஸ்கரன், முனியாண்டி , வனிதா , பிரவீன் உள்ளிட்ட பணியாளர்கள் சாலையோர வியாபாரிகளுக்கு விளக்கம் அளித்து விண்ணப்பங்கள் பெறும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


