விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாளையம்பட்டி ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சிக் கல்லூரியில் 2004-2006ம் கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
அருப்புக்கோட்டை பாளையம்பட்டியில் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சிக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் கடந்த 2004-2006ம் கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அக்கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
அப்போது அக்கல்லூரியின் கணித விரிவுரையாளர் வெங்கிடசாமி மற்றும் கல்வித் தொழில்நுட்ப விரிவுரையாளர் அழகப்பன் ஆகியோருக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் சிறப்பு வரவேற்பு மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதையடுத்து அம்மாணவர்கள் நினைவாக அக்கல்லூரிக்கு பீரோ ஒன்று அம்மாணவர்கள் சார்பில் பரிசாக அளிக்கப்பட்டது.
பின்னர் விரிவுரையாளர் வெங்கிடசாமி தனது சிறப்புரையில் பேசியபோது, 204-2006ம் கல்வியாண்டில் பயின்ற மொத்தம் 50 மாணவர்களில் 36 பேர் ஆசிரியர் பணி மற்றும் பல்வேறு அரசுப் பணிகளில் தற்போது பணியாற்றுவது இக்கல்லூரிக்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது எனத் தெரிவித்தார். அதையடுத்து முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவராக மேடையில் தம்மை அறிமுகம் செய்துகொண்டு, கல்லூரிக்கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு மனநெகிழ்வுடன் மகிழ்ச்சியடைந்தனர்.
தங்கள் வாழ்க்கை அனுபவங்களைக்கூறி, தற்போது இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கல்லூரி விரிவுரையாளர்கள் வாழ்க்கைக் கல்வியாக எடுத்துரைக்கவேண்டுமென விரிவுரையாளர்களுக்குத் தெரிவித்தனர்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


