வால்லெட்டில் பணம் அனுப்புவதாகக் கூறி மோசடியாளர்கள் ஏமாற்றலாம் என்று அடையாறு காவல்துறை துணை ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்த எச்சரிக்கை செய்தியில், யாரேனும் உங்களுக்கு வால்லெட் மூலம் பணம் அனுப்புவதாகவும் அதற்கு க்யூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்யுமாறு கூறினால் கவனம். உங்கள் பணம் மோசடி செய்யப்பட்டலாம்.
பணம் பெறுவதற்கு நீங்கள் க்யூஆர் ஸ்கேன் செய்யவோ பாஸ்வேர்ட் அளிக்கவோ தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
மோசடி.. இதற்குத்தான் எத்தனை வழிகள். ஒரு மோசடியிலிருந்து தப்புவிக்க வழியைக் கண்டுபிடிப்பதற்குள் அடுத்த மோசடி கிளம்பிவிடுகிறது.
தொழில்நுட்பம் வளர வளர மோசடிகளும் வளர்ந்து கொண்டே போகிறது. இதனால் அப்பாவிகளும், ஏழைகளும் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சின்னஞ்சிறு தொகைகளைக் கூட இழக்க நேரிடுகிறது.
பெற்றவர்களுக்கு அது வெறும் பணம். ஆனால் இழந்தவர்களுக்கோ, அது அவர்களது மருத்துவச் செலவுக்கான பணமாகவோ, கல்விச் செலவாகவோ, திருமணத்துக்கான வரதட்சிணையாகவோ இருக்கலாம். அந்த இழப்புகளால் அவர்கள் அடையும் இன்னல்களும் ஏராளமானதாக இருக்கும்.
ஒவ்வொரு மோசடி குறித்தும் காவல்துறையினரும் தங்களால் இயன்ற அளவுக்கு எச்சரிக்கைகளைக் கொடுத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் மோசடியாளர்கள் ஏமாந்த சமயத்தில் அல்லவா தங்களது கைவரிசையைக் காட்டுகிறார்கள்.
எனவே மக்களே உஷார்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


