சென்னை: சென்னை வந்திருக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்துப் பேசினார்.
தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ள மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சென்னையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்தார்.
பின்னர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி ஒத்திகையை நேரில் பார்வையிட்டார். அப்போது மருத்துவப் பணியாளர்களிடமும் ஹர்ஷ் வர்தன் உரையாடினார்.
தமிழகத்தில் இன்று தொடங்கிய கரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சியை நேரில் ஆய்வு செய்த பின்னர், மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கரோனா தடுப்பூசி மருந்துகளை வைக்க உருவாக்கப்பட்டுள்ள மருந்து கிடைங்கை ஆய்வு செய்தார்.
பின்னர், கரோனா தடுப்பூசி விநியோகம் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆய்வுகளுக்குப் பின், தலைமைச் செயலகம் வந்த மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்துப் பேசினார்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


