திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் இரண்டு நாள் மாநில மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை துவங்கியது.
மாநாட்டில் சங்க கொடியை ஏற்றிவைத்து, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநாட்டுக்கு மாநிலத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவர் சண்முகம் வரவேற்றார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் மாநிலத் தலைவர் ராமமூர்த்தி துவக்க உரையாற்றினார்.
வேலை அறிக்கையைப் பொதுச்செயலாளர் பாரி தாக்கல் செய்தார். மாநிலப் பொருளாளர் விஜயபாஸ்கர் நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். இந்த மாநாட்டில் முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க கௌரவ தலைவர் பரமேஸ்வரன், திருப்பூர் இந்தியத் தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் தங்கராஜ், மற்றும் 500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


