சென்னை: தமிழகத்தில் கரோனா சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடுவது தொடர்பான பணிகள் மனநிறைவையும், திருப்தியையும் அளித்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கரோனா தடுப்பூசி ஒத்திகையை நேரில் ஆய்வு செய்த சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கரோனா தடுப்பூசி பணிகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, நாடு முழுவதும் இன்று கரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று மாநிலங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
தமிகத்தில் கரோனாவுக்கான சிகிச்சை சிறப்பான முறையில் அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சிகளை மூன்று இடங்களில் ஆய்வு செய்தேன். தடுப்பூசி பணிகள் திருப்திகரமாகவும், மனநிறைவையும் தருகிறது. கரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுளள்து என்றார்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


