சர்வதேச மனித உரிமைகள் குற்றத்தடுப்பு அமைப்பு மற்றும் டாக்டர் அன்புசுந்தரம் அறக்கட்டளை இணைந்து சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் ஏழுகிணறு ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வினை நடத்தினார்கள்.
எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடி போக்குவரத்து ஆய்வாளர் அருள்தாஸ் கேட்டுக் கொண்டதன் பேரில் சர்வதேச மனித உரிமைகள் குற்றத்தடுப்பு அமைப்பு மற்றும் டாக்டர் அன்புசுந்தரம் அறக்கட்டளை இணைந்து எளாவூர் ஏழுகிணறு ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்விற்கு சர்வதேச மனித உரிமைகள் குற்றத்தடுப்பு அமைப்பின் மாநில தலைவர் எஸ்.அன்பு சுந்தரம் தலைமை தாங்கினார்.
நிகழ்வில் செங்குன்றம் போக்குவரத்து அலுவலக சாலை போக்குவரத்து அலுவலர் இளமுருகன், போக்குவரத்து ஆய்வாளர்கள் அருள்தாஸ், காவேரி முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் போக்குவரத்து விதிகள் குறித்து சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும் தலைக்கவசம் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள், இருக்கை பட்டை அணியாமல் சென்ற கார் ஓட்டுனர்கள் நிறுத்தப்பட்டு தலைக்கவசம், சீட் பட்டையின் நன்மைகள் விளக்கப்பட்டு அவர்களிடம் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதே போல அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கும் பிரத்யேகமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்வில் சர்வதேச மனித உரிமைகள் குற்றத்தடுப்பு அமைப்பின் தெற்கு மண்டல மாநில தலைவர் டி.மாரிதுரை,மாநில செயலாளர் டாக்டர் திருமலை, அறங்காவலர் லட்சுமி நாராயணன், கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை குழு தலைவர் தேவேந்திரன், தேவகுமார்,ஸ்ரீதரன், முனைவர் தமிழ்செல்வன், அருண்குமார், ராஜ்குமார், மணிகண்டன், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் தினேஷ்குமார், கோகுல், சுதாகர், சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


