சென்னை: நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், எங்களது நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் விஜயன் சுப்பிரமணியன், சட்டவிரோதமான இணையதளங்களில் மாஸ்டர் படத்தை வெளியிட்டால் தங்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும். எனவே இந்த திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடக் கூடாது என வாதிட்டார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மாஸ்டர் திரைப்படத்தை 400 சட்டவிரோத இணையதளங்களில் வெளியிட தடைவிதித்து இணையதள சேவை வழங்கும் 29 நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


