தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு எத்தனை இடம் என்பதை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்தான் முடிவு செய்வார் என்று காங்கிரஸ் தலைவர் மணி ஷங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2021 மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் இறங்கியுள்ளன.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர், கூட்டணி, சசிகலா விடுதலை என சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு இடம் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் மணி ஷங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 'சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு எவ்வளவு இடங்கள் என்பதை ஸ்டாலின்தான் முடிவு செய்வார். எங்களுக்கு வழங்கப்படுவதை நாங்கள் முழுமனதோடு ஏற்றுக்கொள்வோம். எனினும் மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பேச்சுவார்த்தையில் முன்வைப்பேன். ஏனெனில் திமுக அங்கு ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை. ஆனால், முன்னதாக காங்கிரஸ் வெற்றி வேட்பாளர் அங்கு இருந்தார். எண்ணிக்கையில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை, ஆனால், ஒரு சில இடங்களில் மாற்றம் இருக்கும்' என்று தெரிவித்தார்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


