காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 27வது வருடாந்திர ஆராதனை மஹோத்ஸவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
காஞ்சி காமகோடி பீடத்தில் 68வது பீடாதிபதியாக 87 ஆண்டுகள் அருள்பாலித்தவர் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். மகா பெரியவர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட இவரது 27வது வார்ஷிக ஆராதனை மஹோத்ஸவம் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் தொடங்கியது.
மஹோத்ஸவத்தை முன்னிட்டு மகா பெரியவரின் திருவுருவ சிலைக்கு காலையில் சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும், வேதபாராயணங்களும் நடைபெற்றது. மகா பெரியவரின் அதிஷ்டானம் மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கரவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மகா பெரியவரின் அதிஷ்டானத்துக்குச் சிறப்புத் தீபாராதனைகள் காண்பித்ததுடன் பக்தர்களுக்கு அருளாசியும் வழங்கினார்.
மாலையில் சங்கரமடத்தில் ஜெயஸ்ரீ ஜெயராமகிருஷ்ணன் குழுவினரின் கர்நாடக இன்னிசை வாய்ப்பாட்டுக் கச்சேரியும் நடைபெற்றது. சங்கர மடத்தின் ஸ்ரீகாரியம் வி.விஸ்வநாத ஐயர்,மேலாளர் என்.சுந்தரேசன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை(ஜன 9) சங்கர மடத்தில் காலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள், வேதபாராயணம், நாமசங்கீர்த்தனம் ஆகியனவும் இரவு மடத்தின் வளாகத்திற்குள்ளாகவே தேரோட்டமும் நடைபெறுகிறது.
நாளை(ஜன.10)ஆம் தேதி மகா பெரியவரின் ஆராதனையை முன்னிட்டு ஸ்ரீருத்ரபாராயணமும், ஹோமங்களும்,விசேஷ பூஜைகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அன்றைய தினம் பஞ்சரத்தின கீர்த்தனை கோஷ்டி கானமும் நடைபெறுகிறது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


