சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ராஜபாளையத்தில் ஆட்டோ மீது அரசு பேருந்து மோதல்: ஆட்டோ ஓட்டுனர் பலி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அரசு பேருந்து ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் பலியானதாக காவல்துறையினர் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

News image

உ.பி.யில் லாரிகள் மோதல்: 3 பேர் பலி, 6 பேர் காயம்

Updated On :8 ஜனவரி 2021, 11:33 pm

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அரசு பேருந்து ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் பலியானதாக காவல்துறையினர் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

ராஜபாளையம் அருகே சமுசிகாபுரம் வாகைகுளம்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (36) இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்  பாலசுப்ரமணியம் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆட்டோவை ஓட்டிசென்ற போது  ராஜபாளையத்திலிருந்து போடிக்கு சென்ற அரசு பேருந்து முன்பு சென்ற ஆட்டோ மீது மோதியதில் பாலசுப்பிரமணியத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்குக் கொண்டு செல்லும் வழியில்  திருமங்கலத்தில் உயிரிழந்தார். சம்பவம் குறித்து தெற்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.