சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது

நாடு முழுவதும் இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

News image

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

Updated On :8 ஜனவரி 2021, 4:07 pm

சென்னை: நாடு முழுவதும் இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் தலா 5 மையங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

ஒவ்வொரு மையங்களிலும் ஒரு பொறுப்பு அதிகாரி மற்றும் 25 சுகாதாரப் பணியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் ஆய்வு செய்தார். 

பின்னர் தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கரோனா நோய்த்தொற்றை தமிழ்நாடு கட்டுப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது என்றார். 

மேலும், இரண்டு நாள்களில் கரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்க மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முன்கள பணியாளர்கள், முதியவர்களுக்கு முதல்கட்டமாக தடுப்பூசி போடப்படும் என்று ஹர்ஷ் வர்தன் கூறினார்.