தம்மம்பட்டி: தொடர் மழை மற்றும் விலை வீழ்ச்சியினால், தம்மம்பட்டி பகுதி விவசாயிகள் மக்காச்சோள அறுவடையை நிறுத்தி வைத்துள்ளனர்.
தம்மம்பட்டி பகுதியில், கடந்த ஆண்டு மானாவாரி அறுவடை காலத்தில், ஒரு மூட்டை (100 கிலோ) மக்காச்சோளம் விலை, அதிகபட்சம் ரூ.2200 வரைக்கும் விற்பனையாகி விவசாயிகளை மகிழ்ச்சி அடையச் செய்தது. அதனால், இந்த ஆண்டு மானாவாரி பட்டத்தில், தம்மம்பட்டி பகுதியில், அதிக ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் நடவு செய்யப்பட்டது.
கடந்த மாதம் அறுவடை துவங்கிய போது, ஒரு மூட்டை மக்காச்சோளம் ரூ.1400-க்கு விற்றது. அதிக விளைச்சல் மற்றும் தொடர் மழையின் காரணமாக, மக்காச்சோளத்தின் விலை படிப்படியாக குறைந்து, ஒரு மூட்டை ரூ.1180 ஆக வீழ்ச்சி அடைந்து விவசாயிகளை கவலை அடையச் செய்தது.
வரும் பொங்கல் பண்டிகை முடிந்து, மானாவாரி பட்டத்தின் இறுதிகால அறுவடை, துவங்கும் போது, மக்காச்சோளம் விலை உயரும் என உள்ளூர் வியாபாரிகள் வட்டாரத்தில் கூறப்படுவதால், தம்மம்பட்டி பகுதியில் மக்காச்சோளம் அறுவடையை, பெரும்பாலான விவசாயிகள், தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


