சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இடையப்பட்டியில் கிறிஸ்துமஸ் பெருவிழா

வாழப்பாடி அருகே இடையப்பட்டி கிராமத்தில் பரலோக திறப்பின் வாசல் அறக்கட்டளை சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா இன்று வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.  

News image

இடையப்பட்டியில் கிறிஸ்துமஸ் பெருவிழா

Updated On :8 ஜனவரி 2021, 11:28 pm

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இடையப்பட்டி கிராமத்தில் பரலோக திறப்பின் வாசல் அறக்கட்டளை சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா இன்று வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.  

வாழப்பாடி அடுத்த இடையபட்டி கிராமத்தில், பரலோக திறப்பின் வாசல் தேவாலய அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
கரோனா தொற்று பரவலால் டிசம்பர் மாதம் நடைபெறும் கிறிஸ்துமஸ் பெருவிழா மற்றும் சிலுவை ஊர்வலம் ஒத்திவைக்கப்பட்டு. இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இடையப்பட்டி மாரிமுத்து கவுண்டர் தோட்டத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, பரவாத திறப்பின் வாசல் தேவாலய பாதிரியார் எம். குணசேகரன் தலைமை வகித்தார். ஜி அன்பழகன் வரவேற்றார். ஜெயமணி குணசேகரன், நான்சி பிரபு, கலைச்செல்வி, ரம்யா மகேந்திரன் ஆகியோர் விளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர்.

பல்வேறு பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மதபோதகர்கள் கலந்து கொண்டு, உலக நன்மைக்காகவும்,  கரோனா பெருந்தொற்று நீங்கவும் சிறப்புப் பிரார்த்தனை செய்தனர். இந்த விழாவில், தொழிலதிபர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக, அறிவழகன் நன்றி கூறினார்.