சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சென்னை-மதுரை தேஜஸ் சிறப்பு ரயில்: ஜன.10 முதல் மீண்டும் இயக்க வாரியம் ஒப்புதல்

சென்னை எழும்பூா்-மதுரை இடையே தேஜஸ் சிறப்பு ரயிலை ஜனவரி 10-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

News image

தேஜஸ் விரைவு ரயில்

Updated On :8 ஜனவரி 2021, 1:08 pm


சென்னை: சென்னை எழும்பூா்-மதுரை இடையே தேஜஸ் சிறப்பு ரயிலை ஜனவரி 10-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை எழும்பூா்-மதுரை இடையே வாரத்தில் வியாழக்கிழமை தவிா்த்த மற்ற நாள்களில் தேஜஸ் விரைவு ரயில் இயக்கப்பட்டது. பயணிகள் வரத்து குறைவு காரணமாக, ஜனவரி 4-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், சென்னை-மதுரை தேஜஸ் ரயிலை ஜனவரி 10-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து தினமும் (வியாழக்கிழமை தவிர) காலை 6 மணிக்கு தேஜஸ் சிறப்பு ரயில் (02613) புறப்பட்டு , திருச்சி, கொடைக்கானல் சாலை வழியாக மதுரையை நண்பகல் 12.15 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கமாக, மதுரையில் இருந்து தினமும் (வியாழக்கிழமை தவிர) பிற்பகல் 3 மணிக்கு தேஜஸ் ரயில் (02614) புறப்பட்டு, கொடைக்கானல் சாலை, திருச்சியை கடந்து, அதே நாள் இரவு 9.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்து சேரும். இரு மாா்க்கமாகவும் இந்த ரயில் சேவை ஜனவரி 10-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

ஜனவரி 10-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு தொடங்கும் சேவைக்கான பயணச்சீட்டை இணையவழி அல்லது டிக்கெட் கவுன்ட்டா் மூலமாக எடுத்து, ரத்து செய்யாமல் வைத்திருக்கும் பயணிகள் அந்த பயணச்சீட்டை வைத்து பயணிக்க முடியும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.