சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆற்காடு குமரகிரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலைப் பாதை: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்

ஆற்காடு அடுத்த குமரகிரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மலைப் பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். 

News image

ஆற்காடு அடுத்த குமரகிரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மலைப் பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

Updated On :8 ஜனவரி 2021, 5:57 pm

ஆற்காடு அடுத்த குமரகிரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மலைப் பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். 

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த குமரகிரி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நீண்டகாலமாக மலைப்பாதை அமைக்க அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்நிலையில், சுமார் 3 கோடி மதிப்பிலான மலைப் பாதை அமைக்க அறநிலைத் துறை சார்பாக அனுமதி வழங்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. 

இதையடுத்து மலைப் பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

இதில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், அறநிலைத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.