கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் தலைமை வகித்தார்.
முன்னதாக அனைவருக்கும் கரோனா கால சிறப்பு முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்கும் வகையில் சுகாதார திரவம் மற்றும் முகக்கவசங்கள் பள்ளியின் சார்பில் வழங்கப்பட்டது.
சமூக இடைவெளியை கடைப்பிடித்து அனைவருக்கும் இருக்கைகள் அமைத்துக் கொடுத்து பயிற்சி முகாம் துவக்கப்பட்டது.
முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் மு. இலட்சுமி வரவேற்றார். தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள் தனது தலைமை உரையில் தற்போதைய கரோனா கால பள்ளியின் செயல்பாடுகள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவின் அவசியம் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார். பின்னர் உதவி ஆசிரியர்கள் சி. ஆனந்த கோபாலகிருஷ்ண மூர்த்தி, இராம்குமார் ஆகியோர் பயிற்சி முகாமுக்கான கருத்துக்களை வழங்கினர். நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கு. ஆனந்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பெ. மகாலட்சுமி உள்ளிட்ட அனைவரும் கலந்துக் கொண்டனர்.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


