திருமங்கலத்தில் சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கம் சார்பில் ஒப்பாரி வைக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருமங்கலம் முன்சிப் கோர்ட் சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்தும், புதுதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி பாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் சூரியகலா தலைமை வகித்தார். தாலுகா குழு செயலாளர் அம்சவல்லி, தாலுகா தலைவர் பாண்டீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைச் செயலர் எஸ்.கண்ணகி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாதர் சங்கத்தினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


