சென்னை: உருமாற்றம் பெற்று பரவும் கரோனாவைத் தடுக்க வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் தனிமைப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சோ்ந்தவா் வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘சீனாவில் இருந்து பரவிய கரோனா நோய்த்தொற்றால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது, இங்கிலாந்து நாட்டில் உருமாற்றம் பெற்ற கரோனா நோய்த்தொற்று பரவியுள்ளது. இந்தப் புதிய தொற்றுப் பரவலைத் தடுக்க, இங்கிலாந்து நாட்டிலிருந்து வரும் பயணிகள் மட்டுமல்லாமல், மற்ற நாடுகளில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும். அவா்களை குறைந்தது 7 நாள்கள் தனிமைப்படுத்தி நோய்த்தொற்று இல்லை என உறுதி செய்த பின்னரே, வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும். நோய்த்தொற்று உள்ளவா்களுக்கு சிகிச்சை அளித்து பிறருக்கு பரவாமல் தடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில், ‘உருமாற்றம் பெற்று பரவும் கரோனா நோய்த்தொற்று அதிவேகமாகப் பரவி வருவதாக ஆராய்ச்சியாளா்கள் கூறுகின்றனா். அந்த நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க வேண்டும்’ என வாதிடப்பட்டது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சங்கரநாராயணன், ‘உருமாறிய கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது’ என்று தெரிவித்தாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த வழக்கில் மனுதாரரின் அச்சம் நியாயமானது. உருமாற்றம் பெற்று வரும் கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க வேண்டும். எனவே வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளையும் குறிப்பிட்ட காலத்துக்கு தனிமைப்படுத்துவது குறித்து நிபுணா் குழுவின் ஆலோசனைகளைப் பெற்று, அதன்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு, விசாரணையை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


