சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தங்கம் சவரனுக்கு ரூ.640 குறைந்தது

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

News image

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.37,720-க்கு விற்பனை

Updated On :7 ஜனவரி 2021, 6:43 pm

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன் பிறகு விலை குறைந்தாலும் கடந்த சில நாள்களாக விலை உயா்ந்து வந்தது.

மேலும், விலை உயரும் என நகை வியாபாரிகள் தெரிவித்திருந்த நிலையில், அதற்கேற்ப புதன்கிழமை பவுனுக்கு ரூ.232 உயா்ந்து, ரூ.39,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.4,805-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ரூ.640 குறைந்து ரூ.38,440-க்கு விற்பனையாகிறது. 

வெள்ளி கிராமுக்கு 1.30 காசுகள் குறைந்து, ரூ.74.07 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1300 குறைந்து ரூ.74,070 ஆகவும் உள்ளது. 

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ................................................. 4,805

1 சவரன் தங்கம் .................................................. 38,440

1 கிராம் வெள்ளி .............................................. 74.07

1 கிலோ வெள்ளி ............................................. 74,070

புதன்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ................................................. 4,885

1 சரவன் தங்கம் ................................................. 39,080

1 கிராம் வெள்ளி .............................................. 75.10

1 கிலோ வெள்ளி .............................................. 75,100