சென்னை: தமிழகத்தில், புதன்கிழமை புதிதாக 811 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 8.23 லட்சமாக உயா்ந்தது.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினா் அலோபதி மருத்துவத்துடன் சித்தா, யோகா, ஆயுா்வேதம் என ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை முன்னெடுத்ததும், உயா் மருத்துவ சிகிச்சைகளையும் நோயாளிகளுக்கு அளித்து வருகின்றனா்.
அதுமட்டுமல்லாது மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளை அமைத்து கரோனா நோயாளிகள் அனைவருக்கும் உரிய நேரத்தில் சிகிச்சையளித்து வருகின்றனா். இதனால் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனிடையே, தமிழகத்தில் புதிதாக 811 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு :
மாநிலத்தில் இதுவரை 1.45 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 8 லட்சத்து 23,181 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 228 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 7,665 போ் சிகிச்சையில் உள்ளனா்.
அதே நேரம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 11 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,188-ஆக உயா்ந்துள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


