கோவை மாநகர் முழுவதும் பறவை காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கு சுகாதாரத் துறையும் கோவை மாநகராட்சி நிர்வாகமும் நோய்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழக சுகாதாரத்துறையின் உத்தரவின் பேரில் கேரள தமிழக எல்லைகள் வழியாக வரக்கூடிய வாகனங்களுக்கு கிருமிநாசினிகள் தெளித்து தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவையில் புதன்கிழமை திடீரென மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாகவும் நோய்கள் பரவாமல் இருப்பதற்காகக் கோவை மாநகர சுகாதார துறையும் கோவை மாவட்ட நிர்வாகம், மற்றும் மாநகராட்சி ஊழியர்களும் கோவை மாநகர் பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகள் மற்றும் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளித்து சுகாதாரத்தைப் பேணும் விதமாகவும், நோய் தொற்று பரவாமல் மக்களை பாதுகாக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோழி இறைச்சி கடைகள், ஆட்டு இறைச்சி கடைகள், மீன் விற்பனை அங்காடி போன்ற பகுதிகளில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகளானது முழுவீச்சில் நடந்து வருகிறது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


