கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் தேர்தலை புறக்கணிப்போம் என்று வேளாளர் வெள்ளாளர் உறவின்முறை சங்கங்கள் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்ட வேளாளர் வெள்ளாளர் உறவின்முறை சங்கங்கள் சார்பில் கம்பம், கடலூர் பகுதிகளில் வால் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
அதில் தேர்தலை புறக்கணிப்போம், வேளாளர் என்பது எங்களது சாதிப்பெயர், 2 கோடி எங்கள் சமுதாய வாக்கு இனி யாருக்கும் இல்லை. எங்கள் வேளாளர் என்னும் ஜாதிப் பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு தாரை வார்க்க நினைக்கும் மத்திய, மாநில அரசுகள் மௌனம் காக்கும் மற்ற அனைத்து கட்சிகளும் ஓட்டுப் பிச்சை கேட்டு எங்கள் சமுதாய மக்களை நாடி வராதே, என்று உள்ளது.
இதுபற்றி கம்பம் வேளாளர் மத்திய சங்க தலைவர் கே.வி.பி. முருகேசன் என்பவரிடம் கேட்டபோது, வேளாளர், வெள்ளாளர் என்ற எங்களது சமுதாய பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு அரசு அறிவித்து உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதுதொடர்பாக மாவட்டம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்த உள்ளோம் என்று தெரிவித்தார்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


