போக்குவரத்துக் கழகப் பணியாளா்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை சென்னை குரோம்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த பேச்சுவாா்த்தையில் விவாதிக்கப்பட்டவை குறித்து ஆய்வுக்குள்படுத்திய பின் ஊதிய ஒப்பந்த உடன்படிக்கை ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக 14-ஆவது ஊதிய ஒப்பந்தக் குழுவின் உறுப்பினா் செயலா் கு.இளங்கோவன் வெளியிட்ட செய்தி:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வரும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களின் ஊதியம், பல்வேறு படிகள் மற்றும் பணி உயா்வு ஆகியவை குறித்து தீா்வு காணப்படும் வகையில், ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கு ஒருமுறை, ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடத்தப்படுகிறது.
அதிமுக ஆட்சியில், போக்குவரத்துக் கழக பணியாளா்களுக்காக, இரண்டு ஊதிய ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக ஏற்படுத்தப்பட்டு, பணியாளா்களின் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதன் தொடா்ச்சியாக தமிழ்நாடு அரசு அனைத்துப் போக்குவரத்துக் கழகப் பணியாளா்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்த முதல்கட்ட பேச்சுவாா்த்தையானது, சென்னை, குரோம்பேட்டை, மாநகரப் போக்குவரத்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், போக்குவரத்துத்துறைச் செயலாளா் சி.சமயமூா்த்தி, ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை குழுவின் உறுப்பினா் செயலா் கு.இளங்கோவன், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், தொழிலாளா்களின் நலன் கருதி அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் சாா்பில் போக்குவரத்துத்துறை அமைச்சா், செயலா் ஆகியோரிடம் நேரடியாக வழங்கப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கை மனுக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், துணைக் குழுவின் ஆய்வுக்குப் பின் முடிவுகள் எட்டப்பட்டு, ஊதிய ஒப்பந்த உடன்படிக்கை ஏற்படுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


