வேலூர் வடக்கு காவல்நிலைய உதவி ஆய்வாளரின் கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் காவல்நிலைய மேற்கூரை சேதமடைந்தது. இச்சம்பவம் தொடர்பாக, உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் விசாரணை நடத்தி வருகின்றார்.
வேலூர் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜசேகர், விருதம்பட்டு காவல் உதவி ஆய்வாளர் ஜெகதீசன் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை பிரிவில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு வடக்கு காவல்நிலையத்தில் அமர்ந்திருந்தனர்.
அப்போது, ஜெகதீசன் தனது கைத்துப்பாக்கியை காவல் நிலைய மேஜையில் வைத்தபோது, திடீரென அந்த துப்பாக்கி பயங்கர சப்தத்துடன் வெடித்ததாகக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாகத் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு யாரையும் பதம் பார்க்காமல் காவல் நிலைய மேற்கூரையைத் துளைத்தது. இதனால் காவல்நிலையத்தின் மேற்கூரை கடுமையாகச் சேதமடைந்தது. இதனால், காவல்நிலையத்திலிருந்த அனைத்து காவலர்களும் பதற்றமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான் விசாரணை நடத்தினார். இதில், துப்பாக்கியைச் சுத்தம் செய்தபோது அதிலிருந்து குண்டு தவறுதலாக வெடித்துள்ளது. விசாரணையைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் ஜெகதீசன் மீது துறைரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


